Site icon Chandamama

இது இல்லாம வாழ்க்கையே இல்லை…

Reading Time: < 1 minute

வணக்கம் நண்பர்களே, ஆக்சிஜன்க்கு அப்புறம் வாழ்க்கைல உணவு உடை இருப்பிடம் இதெல்லாம் இல்லாம வாழ்க்கை இல்லை இது நிதர்சனம். ஆனா வேடிக்கையான ஒரு மன போக்குல யோசிச்சப்போ தலை வலி இல்லாம நாம் வாழ்க்கையை ஓட்டுவது முடியாத காரியம்னு தோணுது. எப்படின்னு புரியலையா தொடர்ந்து படிங்க புரியும்.

சின்ன வயசுல பள்ளி கூடத்துல வீட்டு பாடம் பண்ணல அல்லது டெஸ்ட்க்கு படிக்கலான நம்ம எல்லாரும் சொல்லிருக்க கூடிய ஒரு காரணம் தலை வலி. இங்க தாங்க ஆரம்பிக்குது இந்த தலை வலியோட தேவை. டீச்சருக்கு பயந்துகிட்டு இதை காரணமா பள்ளிக்கூடத்துல சொல்ல ஆரம்பிக்கிற நாம…

வீட்டுல அம்மா அப்பாகிட்ட பொய் சொல்லி மாட்டிக்கிட்டா, பாட்டியோட மூக்கு கண்ணாடிய தெரியாம ஒடச்சிட்டா, தாத்தாவோட பழைய கதை புஸ்தகத்த தொலைச்சிட்டா, தம்பியோட பொம்மைய ஒடச்சிட்டா. அக்காவோட உண்டியல் காச திருடிட்டா, நண்பர்கள விட்டுட்டு தனியா ஐஸ் வாங்கி சாப்பிட்டா.. இப்படி நம்ம சின்ன வயசுல என்னலாம் பண்ணி மாட்டிக்கிறோமோ அப்போ எல்லாம் அதிலிருந்து தப்பிக்க சொல்ற பெரும்பான்மையான ஒரு காரணம் இந்த தலை வலி தாங்க. இப்படி நம்ம வாழ்க்கை உள்ள வர தலை வலி…

காலேஜ்ல புடிக்காத பாடத்திலிருந்து தப்பிக்கவும், வீட்டில் சொல்ற வேலைய செய்யாம இருக்கவும். அலுவலக வேலைய அளவாக செய்யவும். தொணதொணக்கும் காதலியின் பேசிலிருந்து தப்பிக்கவும், முணுமுணுக்கும் அக்கம்பக்கத்தினரிடம் இருந்து அபீட் ஆகவும். கடுப்பேத்தும் கணவனிடம் காண்டாகாமல் அமைதிகாக்கவும், வெறுப்பேத்தும் வீட்டுக்காரியிடம் வீண்சண்டை வளர்க்காமல் வாயை மூடி இருக்க ஒரு காரணமாகவும் நம்ம கூடவே வருது. இப்படி வாழ்க்கையில் வெவ்வேறு தருணத்தில் நம்மை காப்பற்றிக் கொள்ளவும் வெவ்வேறு உறவுகளை காப்பாற்றவும் நம்மை அறியாமலேயே நம் வாழ்க்கையில் நம்முடன் பயணிக்கிறது இந்த தலை வலி. தலை முறைகளை கடந்து தொடர்கிறது இந்த பயணம், இன்னும் பல தலை முறைகளின் வேடிக்கையான பல காரணங்களை காணவிருக்கிறது இந்த தலை வலி. பயணங்கள் முடிவதில்லை…

Exit mobile version