சரியா இது தவறா..

Love @pexels
Reading Time: 2 minutes

விவாதிக்க வேண்டிய தலைப்பு இல்லை, கலந்தாலோசிக்க வேண்டிய ஒரு தலைப்பு – தற்கொலை.. இதை பற்றி பேசினால் கேவலம் ,கௌரவ குறைச்சல் ,குடும்பத்தில் பேசும் விஷியமல்ல என்று இன்றும் பலவிதமான கருத்துக்கள் இருக்கும் நிலையில், தற்கொலை செய்து கொள்வோரின் சதவிகிதம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலை திரை உலகினரை மட்டுமன்றி பொது மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது போன்ற சமயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த கட்டுரையை  சமர்ப்பிக்கிறேன்.

Sushant Singh Rajput
Sushant Singh Rajput


ஏன், எப்போது, எதற்கு?

தற்கொலை ஏன், எப்போது , எதற்கு நிகழ்கிறது என்று சாதாரண மனிதரின் மனநிலையில் இருந்து யோசித்தால், வாழ்க்கையை பற்றிய அதீத பயம் ஏற்படும் போது நிகழ்கிறது என்று விடை கிடைக்கிறது. இது எதிர்காலம் அல்லது நிகழ்கால வாழ்க்கையாக இருக்கலாம். இதற்கு மேல் வாழவே முடியாது என்று பல்வேறு காரணங்களை பிரமை போன்ற ஒரு உணர்வு மிகவும் யதார்த்தமாகவும் அழுத்தமாகவும் தோன்றும் போது தற்கொலை நிகழ்கிறது.

பல சமயங்களில் தங்களை யாரும் புரிந்து கொள்ளவில்லை ,தாளாத தங்கள் துயரை கேட்போர் யாருமில்லை, அதற்கு விடை கூறவோ, உதவி செய்யவோ யாருமில்லை என்பன போன்ற எண்ணங்கள் நாள்பட கூடி மன அழுத்தத்தின் உச்சத்தில் இருக்கும் போது தற்கொலை செய்யும் வாய்ப்புகள் அதிகம்சில சமயங்களில் தடாலடியாக வாழ்க்கையில் ஏற்படும்திருப்பங்களான தேர்வில் தோல்வியுறுதல் ,கூடா நட்பு ,காதல் தோல்வி என்ற சில காரணங்களால் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

Hang Rope
Hang Rope


நினைவில் கொள்ள வேண்டியவை:

1. தனிமையில் இருக்கும் நேரத்தை குறைத்திடுங்கள்.2. வாழ்வில் உங்களுக்கு மட்டும் தான் கஷ்டங்களும் பிரச்சனைகளும் இருக்கிறது என்று நினைப்பதை நிறுத்துங்கள். அடுத்த வேளை உணவிற்கு என்ன செய்வோம் என்றறியாமல் யாசித்து நிற்கும் வயதான முதியவர் தற்கொலை பற்றி யோசிக்கவில்லை. அவரிடம் இருக்கும் துணிவையும், மன தைரியத்தையும் நினைத்தால் தற்கொலை துணிகரமான செயலில்லை என்றறிவீர்கள்.3. எல்லா நேரத்திலும் நீங்கள் வெற்றியாளராகவே வாழ்ந்துவிடவும் முடியாது , வெற்றியும், தோல்வியும், ஏமாற்றங்களும், சவால்களும் நிறைந்ததே இந்த வாழ்க்கை எனும் போர்க்களம்.

4. உங்கள் மனதை புரிந்து கொள்ளும் துணை அமையாவிட்டால், புரிந்துகொள்ள வையுங்கள். எவ்வளவு பாடுபட்டாலும் முடியவில்லையா அது வாழ்வின் எல்லை இல்லை. உங்கள் மனதை புரிந்து கொண்டு, உங்களுக்கு செவி சாய்க்கும் துணையோடு சட்ட பூர்வமாக இணையுங்கள். இது ஒரு உதாரணம் தான், இது போல ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு தீர்வு இருக்கும்.
தீர்வில்லா பிரச்சனை என்று ஒன்று இல்லை.5. மன அழுத்தம் அதிகமாக இருக்கும் நேரம் உங்கள் பெற்றோர் /நெருங்கிய நண்பர்கள் அல்லது துணையோடு கலந்து ஆலோசியுங்கள். பேச யாரும் இல்லாவிட்டால் சைகலாஜிகல் கவுன்சிலர் ஒருவரிடம் உங்களுக்கு தற்கொலை எண்ணம் வந்து போவதை கூறி முறைப்படி மருத்துவம் மேற்கொள்வது இந்த எண்ணங்களிலிருந்து உங்களை விடுதலை அடைய செய்யும்.6. நீங்கள் தற்கொலை செய்து கொள்வதால் உங்கள் பிரச்சனை முடிவதாக நீங்கள் நினைக்கலாம் ஆனால் உங்கள் இழப்பு உங்களின் பெற்றோருக்கோ, உடன் பிறந்தவருக்கோ, வாழ்க்கை துணை அல்லது குழந்தைக்ளுக்கோ ஈடு செய்யமுடியாத இழப்பு ,அந்த மன உளைச்சல் அவர்களையும் தற்கொலைக்கு தூண்டலாம். அவ்வையார் கூறியது போல,“அரிதரிது மானிடர் ஆதல் அரிது”எனவே பிறந்த இப்பிறப்பில் தற்கொலை என்னும் வீண் சிந்தனையை தூக்கி எறிந்து, நம்மாலான உதவியை அனைவருக்கும், செய்து வையகம் போற்ற வாழ்ந்து காலம் வரும்போது வானகம் செல்வோம்.

Leave a Reply