பிடித்ததை கேட்டால் என்ன சொல்ல பிடித்ததை சொல்கிறாள் அவள்? !
அவனுடன் அவன் செய்யும் அனைத்தும் பிடிக்கும் என்று சொல்லிவிடலாமா? சொல்லிக் கொள்ள ஆசைதான் அவளுக்கு என்ன நினைப்பானோ? அன்பு பிடிக்கும் அதை அவனுக்கே அள்ளிக் கொடுக்க பிடிக்கும்.
அவரை எனக்குப் பிடிக்கும் அவளோடு உரையாட பிடிக்கும். புன்னகை பிடிக்கும் அவன் புன்னகை அதிகம் பிடிக்கும். அவன் கை விரல் பிடிக்கும் அது என்னை தீண்டுது இன்னும் பிடிக்கும். அவன் கால் விரல் பிடிக்கும் அதில் நெடி எடுப்பது அதைவிட பிடிக்கும்
அவனது குரல் பிடிக்கும் அதை காதில் இனிக்கும் படி கேட்பது பிடிக்கும் சின்னச்சின்ன இம்சைகள் பிடிக்கும் கண்ணன் அவனை ரொம்ப பிடிக்கும் ரொம்ப பிடிக்கும் அவன் ஓரப்பார்வை பிடிக்கும் அது செய்யும் மாயங்கள் பிடிக்கும் அவன் விழிகள் பிடிக்கும் அதனுள் என் உலகம் பிடிக்கும். அவனை மட்டும் நினைப்பது பிடிக்கும் அவனும் என்னை நினைத்தால் ரொம்ப பிடிக்கும். அவனது கைகள் பிடிக்கும் கைகள் கோர்த்து நடந்தால் இன்னும் பிடிக்கும். தோழனாய் அவரைப் பிடிக்கும் அவனிடம் தோற்றுப் போவது அதை விட பிடிக்கும். அவனை அதிகம் பிடிக்கும் அவனின் அன்பு தான் இன்னும் பிடிக்கும். அவனைக் காதலிக்க பிடிக்கும் அவனால் நான் காதலிக்க படுவது இன்னும் பிடிக்கும். என் தூங்காத இரவுகள் பிடிக்கும் அதை தூங்கவைக்கும் அவனை ரொம்ப ரொம்ப பிடிக்கும் அவன் செய்யும் ஆதிக்கம் அதிகம் பிடிக்கும் அது செய்யும் பாதிப்பும் அதைவிட பிடிக்கும் இன்னும் எத்தனை எத்தனையோ பிடிக்கும் அவை அனைத்தும் அவனிடம் மட்டுமே பிடிக்கும் வளர்பிறை பிடிக்கும் அது முழுமதி ஆனால் இன்னும் பிடிக்கும். அதன் வெளிச்சம் பிடிக்கும் அதிலேயே அவனை காண்பதும் பிடிக்கும் வலிகள் எனக்கு பிடிக்கும் அதன் ரணங்களும் பிடிக்கும் எதிர்பார்ப்பதும் பிடிக்கும் எதிர்பார்ப்பதும் பிடிக்கும் ஏமாற்றப்படுவது ம் பிடிக்கும் எப்போதும் அவனுக்காக வாழ்வது மட்டும் தான் பிடிக்கும். காலம் கடந்து அவனுக்காக மட்டும் காத்திருப்பதுதான் இன்னமும் இன்னமும் இன்னமும் பிடிக்க அவளை மட்டும் தான் பிடிக்கும் கண்ணம்மாவின் கண்ணன் அவன் அவனுக்காகக் காத்திருக்கும் வலிகள் பிடிக்கும் அப்போதுதானே என் காதல் உயிர் கொள்ளும். 🌹🌹 வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்