Site icon Chandamama

சைக்கிள் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று தெரியுமா

Reading Time: < 1 minute

றெக்க கட்டிப் பறக்குதம்மா அண்ணாமலை சைக்கிள் என்றுப் பாட்டுப்பாடிக் கொண்டே ஒரு காலத்தில் சைக்கிள் ஓட்டியவர்கள் ஏராளம். வளர்ந்து வரும் நாகரிகத்தில் சைக்கிள் பயன்பாடு குறைந்து வருகிறது. சைக்கிளைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை வருடந்தோறும் ஜூன் 3 ஆம் தேதி உலக சைக்கிள் தினம் கொண்டாடப்படுகிறது.


சின்னஞ்சிறு வயதிலிருந்தே அனைவருக்கும் சைக்கிள் கற்றுக்கொள்ள ஆசை இருக்கும். வாடகை சைக்கிள் வாங்கி ஓட்டியது ஒரு காலம். இந்த கலர் சைக்கிள் வேண்டும் இந்த நம்பர் சைக்கிள் தான் வேண்டும் கால்கடுக்க காத்திருந்து சைக்கிள் ஓட்டியிருக்கிறோம். இரு சக்கரங்கள் உட்கார சீட் மணி மற்றும் டைனமோ இருக்கும் அழகான மிதிவண்டி.

இந்த மிதிவண்டி தயாரிப்பில்  ஹெர்குளில் கொடிகட்டிப் பறந்தது.
வாடகை சைக்கிளை எடுத்து வந்து சைக்கிளை ஓட்டிப் பழக நாம் சின்ன வயதில் எடுத்த முயற்சிகள் ஏராளம். கீழே விழுந்தாலும் அடித்துப் பிடித்து சைக்கிள் ஓட்டுவோம். வாடகை சைக்கிள் பெறுவதற்காக வீட்டில் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் உதவி செய்து வாடகைக்கானத் தொகையைச் சேர்த்து விடுவோம். அது ஒரு அழகிய கனாக்காலம். சொந்தமாக சைக்கிள் வைத்திருந்தாலே அன்று அது பெரிய கௌரவமாகக் கருதப்பட்டது.


இன்று வளர்ந்து வரும் காலத்தில் புத்தம் புதிய வாகனங்களின் வருகையால் சைக்கிளின் பயன்பாடு குறைந்து வருகிறது. இன்று வீட்டிலேயே சைக்கிளை நிறுத்தி சைக்ளிங் செய்கின்றனர். சைக்கிள் பயன்படுத்துவதால் உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைத்து உடலைச் சீராக வைத்துக் கொள்கிறது. அது மட்டுமின்றி கார் மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்தினால் காற்று மாசு ஏற்படுகிறது. சைக்கிளைப் பயன்படுத்தினால் தூய்மையான காற்றை அனைவரும் சுவாசிக்கலாம்.சைக்கிள் ஓட்டுவதால் மகிழ்ச்சி ஹார்மோன்கள் உடலில் அதிகம் சுரக்கிறது.


சைக்கிள் ஓட்டுவதால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு  மிகவும் குறைவு. பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகள் இருந்தால் சைக்கிள் ஓட்டுவதே சிறந்த தீர்வு. கர்பப்பைக் கட்டிகளை நீக்குவதற்கு சைக்கிள் பயிற்சி பயன்படுகிறது. உடலில் உள்ள தேவையில்லாத நச்சுகளை வெளியேற்றி விடுகிறது.


இன்று குழந்தைகள் இருக்கும் வீடுகளில் மட்டும் தான் சைக்கிளைப் பார்க்க முடிகிறது. முடிந்தால் சைக்கிளில் வாரம் ஒரு முறை அலுவலகத்திற்குச் செல்லலாம்.அருகில் இருக்கும் கடைகளுக்குச் செல்ல மிதிவண்டியைப் பயன்படுத்தலாம். இன்று பெட்ரோல் டீசல் விற்கும் விலையில் அனைவரும் மிதிவண்டியைப் பயன்படுத்தலாமே.

Exit mobile version