ஆஹா நம்ம பொண்ணுகளுக்கு என்ன திறமை என்ன சிக்கனா இவர்களுக்கு யாராவது சிக்கன சிகாமணி எனப்பட்ட கொடுங்களேன் எவ்வளவு சிக்கனவழிமுறைகளையும் கடைபிடிக்கிறார்கள். சரி விடுங்க உங்களுக்கு பதிலா நானே அவங்களுக்கு சூட்டி விடுகிறேன்.
கடைசி தோசையை வார்க்கும் போது அடுப்பை அணைத்து விட்டால் அதுவும் சிக்கனம் தானே ஆஹா இந்த சிறிய செயல் கூட எவ்வளவு பெரிய நன்மையை தருகிறது. செடி தண்ணீர் சிக்கனத்தை பற்றி அல்லி விடுகிறேன் இதுவும் ஒரு தோழியிடம் இருந்து பிறந்த ஐடியாதான் பாத்திரங்களை மேக்கப் போடும் போது வழவழ வென்று இருந்தால் பாத்திரங்களில் தண்ணீரை ஊற்றி ஊற வைப்பார்கள் அம்மாதிரி செய்தால் தண்ணீரில் அதிகம் செலவாகும்.
பாத்திரங்களின் உட்புறம் தண்ணீரை நன்கு தடவி கவிழ்த்து போட்டு வைத்திருந்தால் தேய்க்கும்போது உரிய சுலபமாக தேய்க்கலாம் நான் அனுபவத்தில் அறிந்து. சாம்பார் செய்வதற்கு அதற்கு வேண்டிய உப்பு புளி சாம்பார் பொடி போட்டு கொஞ்சம் தண்ணீரையும் போட்டு குக்கரில் வைத்து ஒரு விசில் வரும் வரை வைத்து பிறகு அதை வாணலியில் கொட்டி ஒருமுறை கொதிக்க வைத்தால் போதும் கேஸ் மிச்சப்படும் குழம்பு நொடியில் தயார் வாணலியில் கடுகு தாளிக்க வைக்கும் பொழுது அதில் தண்ணீர் இருந்தால் வானிலையை துடைத்த பிறகு எண்ணெய் ஊற்றி தாளிக்கவும் கடுகு தாளிக்க அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்தவுடன் கடுகை போட்டு அணைத்து விட்டால் அந்த சூட்டிலேயே கடுகு வெடித்து விடும்.
சிக்கன கேஸ் செலவிற்கு நான் கடைபிடிப்பது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக காபி டீ டிபன் சாப்பிடும் நேரத்தை அமைத்துக் கொண்டால் உணவுப்பொருளை அடிக்கடி தனித்தனியே சுட வைப்பதைத் தவிர்க்கலாம் மீண்டும் சுட வைப்பதால் சத்தும் குறைகிறது….