அப்பாடா ஒரு வேலை லாக்டோன் ஓபன் பண்ணிட்டாங்க,
கொஞ்ச நாளா தள்ளி வைத்திருந்த வேலை எல்லாம் இன்னைக்கு முடிக்கணும் நினைச்சேன். எங்க மாநிலத்தில இலவசமா கோதுமை வழங்கிட இருந்தாங்க எங்களோடது ரேஷன் கார்டு உண்டு நானும் வரிசையில நின்னு வாங்கப் போகும்போது என்னுடைய கார்டு வாங்கி பதிவு என்னைத்தேடி டிக் பண்ண போகும்போது…. எங்களுடைய குடும்பத்தில் யாரோ அரசு வேலையில் இருப்பதாக சொல்லி ரெட் லைன்ல அடிச்சு வச்சிருக்காங்க…. அதனால உங்களுக்கு கோதுமை இல்லைன்னு சொல்லிட்டாங்க எல்லாம் சரிதான் ஆனால் என்ன என்னோட குடும்பத்தில் யாரும் அரசு வேலையில் இல்ல…. அப்படி இருக்கும்போது இது எப்படின்னு கேட்டேன் நீங்க போய் சிவில் சப்ளை இல்லை லெட்டர் எழுதி குடுங்க சொன்னாங்க சரின்னு நானும் போய் லெட்டர் எழுதி கொடுத்தேன்.
ஐயா…….. நான் ஆரம்பிச்சு எழுத வேண்டியதை எழுதிட்டு எனக்கு இலவசமாக கோதுமை வேணாம். எங்க வீட்ல யார் அரசு வேலையில இருக்காங்கன்னு சொல்லுங்க, அப்படியே எந்த வேலையில் இருக்காங்கன்னு சொன்னீங்கன்னா அந்த வேலையில போய் அவங்கள ஜாயின் பண்ண கிட சொல்லுவேன் எழுதிக் குடுத்ததுக்கு முறைச்சு பாக்குறாரு அப்படி என்ன தப்பா எழுதிட்டேன் நீங்களே சொல்லுங்க🤔🤔🤔🤔🤔 இப்படி அரசாங்கப் பணியில் இருப்பவர்களை தவறிழைத்தால் யாரிடம் சென்று மனு கொடுப்பது..