நலம் நலமறிய ஆவல்

Girl with Cell Phone @pexels
Reading Time: < 1 minute

நலம் நலமறிய ஆவல் உன் நலம் நலமறிய ஆவல் என்ற பாடல் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்க  நானோ என் காதலியின் பிரிவால் தவித்துக் கொண்டிருந்தேன். என் பெயர் மதன் நான் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். நான் லதாவை விரும்புகிறேன்.  அது அவளுக்கும் தெரியும். லதா அதே நிறுவனத்தில் கிளார்க்காகப் பணிபுரிகிறாள். ஊரடங்குக் காரணத்தினால் அனைவரும் சொந்த ஊருக்கு வந்துவிட்டோம்.


 எனக்குச் சொந்த ஊர் திருச்சி. லதாவுக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. ஊருக்குப் போனதிலிருந்து அவளிடமிருந்து ஒரு குறுஞ்செய்தியும் வரவில்லை. என் மொபைலில் இருந்து பலமுறை முயற்சித்தும் பலனில்லை. அதனால் அவள் எப்படி இருக்கிறாளோ என்ற கவலை ஆட்டிப் படைத்தது. கடிதம் எழுதலாம் என்றால் முகவரி தெரியவில்லை. தினம் தினம் அவள் என்ன செய்கிறாளோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
இப்படியே பதினைந்து நாட்கள் கடந்துவிட்டது. நாங்கள் காதலித்த இரண்டு வருடங்களில் இப்போது தான் பார்க்காமல் பேசாமல் வெகுநாட்கள் இருக்கிறோம். அவள் நினைவில் நானிருக்க என் அலைபேசி சிணுங்கியது. எடுத்துப  பார்த்தபோது மனோ அழைத்தான்.மனோ என் அலுவலகத்தில் என்னோடு வேலைப் பார்க்கிறான். உற்ற தோழனும் கூட.


போனை எடுத்து ஹலோ சொல்லுடா என்றான்.  எனக்கும் மல்லிகாவுக்கும் திருமணம் நடக்கப் போகுதடா இருவீட்டாரும் சம்மதிச்சிட்டாங்கடா ஆகஸ்டில் திருமணம் என்றான். மல்லிகாவும் மனோவும் கல்லூரியிலிருந்தே காதலித்தவர்கள். அப்படியா ரொம்ப மகிழ்ச்சிடா என்றேன் நான். ஏன்டா ஒருமாதிரி பேசுற என்னடா ஆச்சு என்றான். நான் லதாவிடம் பேச முடியாததைப் பற்றி அவனிடம் கூறினேன்.
எல்லாவற்றையும் கேட்ட அவன் இதுக்கு போயாடா கவலைப்படுகிறாய் அவள் இமெயில் ஐ.டி இருக்குல்ல அதுல கடிதம் எழுதி அனுப்பு அவள் நிச்சயம் பதிலளிப்பாள் என்று தைரியமூட்டினான்.


அட ஆமால்ல என்றவாறே அவளுக்கு மின்னஞ்சல் செய்ய எழுத ஆரம்பித்தேன் நலம் நலமறிய ஆவல் லதா. நீ எங்கிருக்கிறாய் என்னாயிற்று உன் செல்பேசி நான் பலமுறை உன்னைத் தொடர்புக் கொள்ள முயற்சி செய்து தோற்றுவிட்டேன் கண்மணியே. உன்னை நினைத்து என் மனம் ஏங்குகிறது லதா. உன் பதிலை ஆவலோடு எதிர்பார்க்கும் மதன் என்று எழுதி அவளுக்கு அனுப்பினான். மறுநாள் காலையில் அவளிடமிருந்து மின்னஞ்சல் வந்திருந்தது. அதில் என் ஆருயிர் மதனுக்கு நான் நலமாக இருக்கிறேன். என் கைப்பேசி வேலை செய்யவில்லை அதனால் தான் உங்ளைத் தொடர்புக் கொள்ளமுடியவில்லை என எழுதியிருந்தாள்.

Leave a Reply