உலகம் பிறந்ததிலிருந்து ஒரு கணம்கூட நின்றதில்லை. அப்படி ஒரு இயக்கம்! அப்படி ஒரு சுழற்சி! அப்படி ஒரு மாற்றம் மாறுகின்ற உலகில் காண்பவை களும் கண்ணோட்டங்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன! ஆனால் அந்தந்த காலகட்டத்தில் வாழும்போது அழகு, அற கற்றவை என விமர்சிக்கிறோம்.
அது நியாயமாகவும் படுகிறது உண்மையில் எது அழகு தீப்பட்ட முகத்துடன் தாயொருத்தி தனது குழந்தையை கொஞ்சி விளையாடும் அழகான காட்சியை சற்று நேரம் நின்று பார்த்து ரசித்த போது, அவள் சொன்னது என் மனதில் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது. என்னம்மா பார்க்கிற? என் மகளுக்கு உலகத்திலேயே நான்தான் ரொம்ப அழகாம்….
பார்த்து பார்த்து சிரிக்கிறார் உண்மை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை உலகிலே மிக சிறந்த அழகு தாய்மையே! நானும் ஒப்புக் கொள்கிறேன். வெறும் தோற்ற அழகை மட்டுமே எடை போடுகின்ற காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நமது முன்னோர்கள் வரும் தலைமுறை எங்கு தவறி விடுமோ என்று எக்காலத்திலும் பொருந்தும் வகையில் அழகான தமிழ் வரிகளில் அன்றே அழுத்தம் திருத்தமாக கூறி சென்றிருக்கிறார்கள். கல்விக் கழகு சொற்களின் குற்றம் இல்லாமை, செல்வம் படைத்தவருக்கு சுற்றத்தாரை காப்பாற்றுவது, மன்னருக்கு அழகு மீதிமுறைப்படி நாட்டை ஆள்வது, வணிகருக்கு அழகு நாணயம் தவறாமல், வேளாண் மக்களுக்கு அழகு உறவை உயிராக மதிப்பது.
வரும்முன் அறிவது மந்திரிக்கு அழகு போர் வீரருக்கு அஞ்சாமை அழகு, வறுமையில் ஒழுக்கம் அழகு, அறிவுடையோருக்கு அடக்கம் அழகு, இவை அனைத்தும் அன்றைய பட்டியலில் அழகு இது நமக்கு புரிவது கடினம்.
நேற்றைய வரிகளில் இதை சொல்ல வேண்டுமென்றால் கண்ணுக்கு மை அழகு கார் குயிலுக்கு குரல் அழகு, மென்மையாக மனதிற்குள் உட்கார்ந்து மணி அடிக்கிறது இன்று மட்டும் ஏனோ கால் அழகுக்கு அழக உந்தி அழகு விரல் அழகு அதில் நகம் அழகு என சுருக்கி விட்டோம் புரியவே இல்லை, மலர் என்று ரசிக்கலாம் இதழ் இதழாக பிரித்துப் பார்ப்பது ரசனையா? கூறுங்கள் பார்ப்போம்.
அழகோ அழகு இதுவும் அழகு அன்பின் வழியில் எல்லாம் அழகு இலை மற்றும் அழகு இல்ல நல்லதுக்கு சொல்கிற பொய்கள் கூட அழகுதான் இன்றைய காலகட்டத்தில் இது மட்டும் தான் அழகு என்று நினைத்துக் கொண்டு ஆரோக்கியத்தை மறந்துவிடுகிறோம். நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பதும் அழகுதான் நன்றி..