1959 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் யூரல் மலைகளில் உள்ள டையட்லோவ் பாஸில்
இறந்து கிடந்த ஒன்பது மலையேறுபவர்களுக்கு என்ன நடந்தது
என்பது 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் தீர்க்கப்படாத மர்மங்களில் ஒன்றாகும்.
1959 ஆம் ஆண்டில் ஒரு குளிர்காலத்தில்தான் அந்த தொடர் நிகழ்வுகள் ஆரம்பமானது.
மலையேறுவதில் ஆர்வமுள்ள 23 வயதான கல்லூரி மாணவரான இகோர், 10 பேர்
கொண்ட குழுவை திரட்டி யூரல் மலைகளின் வடக்குப் பகுதி வழியாக பனிச்சறுக்கு
பயணத்தில் செல்ல திட்டமிட்டனர்.
அவர்கள் அனைவரும் (எட்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள்) சாதாரண மக்கள்
அல்ல. தரம் ॥- ஹைக்கர் சான்றிதழ்கள், ஸ்கை அனுபவம் உட்பட 190 மைல் (306
கிலோமீட்டர்) பயணம் செய்து மூன்றாம் தரத்திற்கு தகுதி பெற்றவர்கள். இது அந்த
நாட்டின் சிறந்த சான்றிதழ் ஆகும்.
ஜனவரி 25 ல், அவர்கள் குளிர் மற்றும் பனிப்பொழிவுக்கு நடுவில் புறப்பட்டனர்.
அப்போது யூரி யூடின் என்ற ஒரு நபருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது அதனால்
அவர் மட்டும் வீட்டிற்கு திரும்பினார். அவரது இந்த உடல்நிலை மாற்றம் அவரை ஒரு
துர்மரணத்திலிருந்து காப்பாற்றும் என்பதை
அவர் அப்போது அறிந்திருக்கவில்லை.
மற்ற ஒன்பது பேரும் தொடர்ந்தனர்.
ஜனவரி 31 அன்று, குழு ஒரு முக்கியமான வழிப்பாதையை அடைந்தது. இது ஒரு
பள்ளத்தாக்கு. இது இறுதியில் டையட்லோவ்பாஸ் என்று அழைக்கப்படும் இடத்தை
அடைந்தது. அங்கு, அவர்கள் திரும்பும் பயணத்திற்குத் தேவையான கூடுதல் கியர்
மற்றும் உணவை பதுக்கி வைத்தனர்.
இந்த இரவில் அவர்கள் பாஸ் மீது தங்கிவிட்டு அடுத்த நாள் காலையில் மலை ஏற
தொடங்கலாம் என முடிவு செய்து அங்கு முகாமிட்டனர். ஆனால் ஒரு கடுமையான
பனிப்புயல் அவர்கள் விரும்பிய வழியையும் கோலாட் சியாக்ல் என்ற மலையின்
சரிவுகளிலும் பனிக்கட்டிகளை தள்ளியது. அதனால் புதிய வேறு ஒரு முகாமைத் தேர்வு
செய்ய வேண்டும் என்ற நிலை உருவானது. இருந்தாலும் அவர்கள் அங்கேயே தங்க முடிவு
செய்தனர்.
ஒருவேளை அவர்கள் மிகவும் குளிராகவும், திரும்பி வர சோர்வாகவும்
உணர்ந்திருக்கலாம். எவ்வாறாயினும், அவர்கள் தங்களின் திட்டபடி பெரிய
கூடாரத்தை அமைத்தனர். அங்கு அவர்கள் விரைவில் -40 டிகிரி செல்சியஸ் குளிருக்கு
உட்படுத்தப்படுத்தபட்டார்கள்.
நாட்கள் சென்றன. இகோர் குழுவினரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. இந்த குழு
முன்னரே தீர்மானிக்கப்பட்ட நேரத்தில் ஒரு தீர்மானிக்கப்பட்ட இடத்திற்கு வரத்
தவறிவிட்டது. எனவே இராணுவப் பிரிவுகள் உட்பட தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள்
அவர்களை கண்டுபிடிக்க புறப்பட்டன.
ஆனால் அங்கு அவர்கள் கண்டது இதுதான்.
கூடாரம் பாதி பனியால் மூடப்பட்டிருந்தது. கூடாரம் உள்ளே இருந்து கிழிக்கபட்டிருந்தது.
சுற்றிலும் யாரும் இல்லை. குழுவினரை காணவில்லை. அவர்களின் உடமைகள்,
காலணிகள் போன்ற முக்கிய தேவைகள் உட்பட அனைத்தும் கூடாரத்தில் இருந்தன.
கூடாரத்தில் இருந்து கால் தடங்கள் பக்கத்தில் இருந்த ஒரு பைன் காட்டை
நோக்கி சென்றிருந்தது. ஒன்பது பேரும் சாதாரண வேகத்தில் நடந்து சென்றதாக
தடங்கள் சுட்டிக்காட்டியது. ஆனால் கால் தடத்தின் படி சிலர் ஒரு ஷூவை மட்டுமே
அணிந்திருந்தார்கள் அல்லது முற்றிலும் வெறுங்காலுடன் இருந்தார்கள்.
பைன் காடு ஆரம்பத்தில் இரண்டு உடல்கள்
கண்டுபிடிக்கப்பட்டன. அவர்கள் தங்கள் உடைகளை மாறி மாறி
அணிந்திருந்தனர்.
அங்கிருந்து சிறிது தூரத்தில் இன்னொரு உடல் கண்டெடுக்கப்பட்டது அது குழ தலைவன்
இகோரின் உடல். அங்கிருந்து பல நூறு அடிக்குள் கேம்ப்ஃபயர் மற்றும் கூடாரத்திற்கு
இடையில் அவர்கள் மேலும் மூன்று உடல்களை உறைந்த நிலையில்
கண்டுபிடித்தனர். அவர்கள் இருந்த நிலை முகாமுக்குத் திரும்ப முயற்சிசெய்தது போல
இருந்தது.
பள்ளத்தாக்கில் மேலும் மூன்று உடல்கள். கண்டெடுக்கப்பட்ட மூவரும் மண்டை ஓடு
மற்றும் மார்பு எலும்பு முறிவுகள் உட்பட பலவிதமான பயங்கரமான காயங்களுக்கு
ஆளாகி இருந்தார்கள். ஒரு பெண்ணின் கண்களும் நாவும் காணவில்லை ஆனால் ஒரு
போராட்டத்திற்குரிய அறிகுறியே அங்கே
இல்லை.
இது ஒரு மோசமான நிலையை அங்கே காட்டியது.
இவர்கள் அனைவரும் அதிக குளிரின் காரணமாக ‘ஹைப்போதெர்மியாவால்'”
இறந்திருக்கலாம் எனமருத்துவர்கள் கூறுகின்றனர்.
(ஹைப்போதெர்மியா என்பது அதீத வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் ஒரு மன
நோய்) ஆனால் ஒரே நேரத்தில் ஒன்பது பேருக்கும் ஹைப்போதெர்மியா வருவது
சாத்தியம் இல்லை. அப்படியே வந்திருந்தாலும் வெளி காயம் இல்லாமல்
மண்டை ஓடு உடைந்திருப்பதற்கும் ஒரு பெண்ணின் கண்ணையும் நாக்கையும்
காணாமல் போனதற்கும் அர்த்தம் என்ன என
மாற்று கருத்துக்களும் உள்ளன.
மலைக்கு மறுபுறம் இன்னொரு குழு மலையேறுதலில் ஈடுபட்டிருந்தது. அக்குழு
இவர்கள் பாஸில் தங்கிய அதே இரவில் வானில் ஒரு பெரிய வெளிச்சத்தை
பார்த்ததாக கூறினர். அதனால் இது ஏலியனின் தாக்குதலாக இருக்கலாம்
என்றும் கூறப்படுகிறது.
மேலும் இது பல தசாப்தங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் என்ற போதிலும் ரஷ்யாவில்
உள்ள அரசாங்க அதிகாரிகள் அதன் பதிலளிக்கப்படாத கேள்விகளைத் தீர்க்கும்
முயற்சியில் வழக்கை மீண்டும் கையில் எடுத்துள்ளது. 69 வருடங்களுக்கு பிறகு கடந்த
ஆண்டு பிப்ரவரியில் இந்த வழக்கு மீண்டும் கையிலெடுக்கபட்டுள்ளது. அவர்களுக்கு
என்ன நடந்தது என்பதற்கு விடை கிடைக்கிறதா என பொறுத்திருந்து
பார்ப்போம்.