இயக்குனர் சரண் மிக வித்தியாசமானவர் , அவர் படங்களின் கதை , களம் , கதையை கூறும் விதம் ஆகியவை அனைத்தும் புதியதாகவே இருக்கும் , அத்துடன் சற்று ரசனையும் தூக்கலாகவே இருக்கும் .
ஜெமினி மிகப் பெரிய தாதா , அடிதடி , கட்டப்பஞ்சாயத்து , வெட்டுக்குத்து என்று துணிந்து செய்யும் இளம் டான் . தன்னுடைய அடியாள் ஒருவன் இறந்தவுடனேயே இந்த தொழிலை விட நினைக்கிறான் , ஆனால் அதற்கான சந்தர்ப்பம் வராமல் இருக்க , மாநகரின் புதிய போலீஸ் கமிசினராக சிங்கப்பெருமாள் நியமிக்கப்படுகிறார் .
ஊரில் உள்ள முக்கிய தாதாவான ஜெமினியையும் , அவனின் விரோதி தேஜாவையும் கைது செய்து பாதாள சிறையில் அடைக்கிறார் சிங்கப்பெருமாள்.
அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காகவே திருந்தி வாழ்கிறோம் என்கிற உறுதியை அளிக்கின்றனர் இருவரும் . அதில் ஜெமினி மட்டும் நிஜமாகவே திருந்தி வாழ முயற்சி செய்கிறான் .
அவன் விரும்பும் சேட்டுப் பெண்ணிடம் காதலை தெரிவித்து புதிய வாழ்வை தேடிப்போகையில் தேஜா ரூபத்தில் மீண்டும் அவனுக்கு பல நெருக்கடிகள் முலைக்க அதை எப்படி சரிசெய்கிறான் என்பதே ஜெமினி .
மிக வித்தியாசமாக , ஸ்டைலிஷாக எடுக்கப்பட்ட படம் இது , அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய ட்ரெண்ட் செட்டர் இப்படம் .
பரத்வாஜின் அவர்களின் இசையில் ,சிறுவர்கள் முதல் பெரியர்வர்கள் வரை “ஓ” போடு என்று கிறுக்குப் பிடித்து அலையவைத்தது இப்படத்தின் பாடல்கள் .
காதல் என்பதா
தலைகீழா பிறக்கிறோம்
கட்ட கட்ட
தீவான …
ஜெமினி ஜெமினி ( ஓப்போடு )
ஆகிய அனைத்துப்பாடல்களும் தாறுமாறாக ஹிட் ஆனது .
இப்படத்தின் தீம் இசை , தேஜா இசை , பின்னணி இசை , என்று மிகக் கடினமாகவே உழைத்துள்ளர் . இப்படத்தின் இமாலய வெற்றிக்கு இசையும் மிக முக்கிய காரணம் .
கலாபவன் மணி , எப்பேர்ப்பட்ட கலைஞர் ! இப்படத்தின் மூலமாகவே தமிழ் திரைப்படங்களில் அறிமுகமானார் . இப்படத்தில் பலக்குரல் பேசும் வித்தியாச வில்லனாக அறிமுகமாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் .
தேஜா பாத்திரமே இவர் வாழ்வில் பல அற்புதத் திருப்பங்களை ஏற்ப்படுத்தியது என்றால் அது மிகையல்ல .
கிரண் இப்படத்தின் நாயகியாக மிக நன்றாகவே நடித்துள்ளார் .
கை என்னும் பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் தென்னவன்.
ஆச்சி மனோரமா பழிவாங்கத் துடிக்கும் முதியவர் வேடத்தில் மிகப் பிரமாதமாகவே நடித்துள்ளார்.
முரளி சிங்கப்பெருமாளாகவே மிரட்டியுள்ளார். அந்த கதாபாத்திரம் மிக மிக வித்தியாசமான குணச்சித்திர வேடம் என்றே கூறலாம்.
கதையின் நாயகன் விக்ரம் ஜெமினியாகவே நம்மை குதூகலப் படுத்துகிறார்!! சண்டைக்காட்சிகள் , நடனம் , நகைச்சுவை , காதல், என்று சகலமும் செய்துள்ளார் ! இப்படம் விக்ரமிற்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. வசூல் ரீதியிலும் பல சாதனைகளைப் படைத்தது . அதுவும் கிளைமாக்ஸில் வரும் பாடலை மீணடும் மீண்டும் ஒளிபரப்புமாறு கேட்டு ரசிகர்கள் கொண்டாடினர்… குறிப்பாக குழைந்தைகள்.
இப்படத்திற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் இன்றளவும் ஓ போடுவர் !!
மீண்டும் நடிகர் விக்ரமிற்கு இப்படி ஒரு ஜெனரஞ்சகமான வெற்றிப் படம் மீண்டும் எப்போது அமையும் என்பதே அவரது ரசிகர்களின் ஒருமித்த எண்ணம்.
சா.ரா